Home இலங்கை2.1 பில்லியன் ரூபாய் இழப்பீடு பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

2.1 பில்லியன் ரூபாய் இழப்பீடு பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

by admin

 

அரகலய போராட்டங்களின் போது தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக சுமார் 43 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2.1 பில்லியன் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று  நாடாளுமன்றத்தில்  தொிவித்துள்ளாா்.

தங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மிகைப்படுத்தி மதிப்பிடுமாறு அரசாங்க அதிகாரிகளை வற்புறுத்தி அவர்கள் பெரும் இழப்பீடுகளை கோரியுள்ளனர் என அவர் நாடாளுமன்றத்தில்  குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொக்குகே, நிமல் லன்சா மற்றும் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 43 முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு   இழப்பீடு கோரியுள்ளனர் எனவும் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளாா்.

“இயற்கை பேரிடரின் போது முழுமையான சொத்து இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் கூட, அதற்கான அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை . 2.5 மில்லியன்  ரூபாவே ஆகும்,” எனக் குறிப்பிட்ட  அமைச்சர் ஜெயதிஸ்ஸ  பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொகை கிடைப்பது சாத்தியமில்லை எனவும் முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் வழக்கமான வரம்புகளுக்கு அப்பால் அதிகப்படியான இழப்பீடுகளைப் பெற அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவா்  சுட்டிக்காட்டியுள்ளாா்.

 

இழப்பீடு பெற்ற முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் முழு பட்டியல்:

1.⁠ ⁠கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
2.⁠ ⁠விமலவீர திஸாநாயக்க – ரூ. 550,000
3.⁠ ⁠கீதா குமாரசிங்க – ரூ. 972,000
4.⁠ ⁠ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி – ரூ. 1.143 மில்லியன்
5.⁠ ⁠குணபால ரத்னசேகர – ரூ. 1.41278 மில்லியன்
6.⁠பிரேம்நாத் சி. டோலவத்த – ரூ. 2.3 மில்லியன்
7.⁠ பிரியங்கரா ஜெயரத்னா – ரூ. 2.348 மில்லியன்
8.⁠ ⁠சமோத் அத்துகோரளே – ரூ. 2.54061 மில்லியன்
9.⁠ ⁠ஜெயந்த கெட்டகொட – ரூ. 2.8148 மில்லியன்
10.⁠ ⁠விமல் வீரவன்ச – ரூ. 2.954 மில்லியன்
11.⁠ ⁠சன்ன ஜெயசுமன – ரூ. 3.334 மில்லியன்
12.⁠ ⁠அகில எல்லாவல – ரூ. 3.55425 மில்லியன்
13.⁠ ⁠சமல் ராஜபக்ஷ – ரூ. 6.539374 மில்லியன்
14.⁠ ⁠சந்திம வீரக்கொடி – ரூ. 6.9488 மில்லியன்
15.⁠ ⁠அசோக பிரியந்த – ரூ. 7.295 மில்லியன்
16.⁠ ⁠சமன்பிரியா ஹேரத் – ரூ. 10.502 மில்லியன்
17.⁠ ⁠ஜனக பண்டார தென்னகோன் – ரூ. 10.55 மில்லியன்
18.⁠ ரோஹித அபேகுணவர்தன – ரூ. 11.64 மில்லியன்
19.⁠ டாக்டர் சீதா ஆரம்பேபொல – ரூ. 13.78 மில்லியன்
20.⁠ ⁠சஹான் பிரதீப் – ரூ. 17.13 மில்லியன்
21.⁠ ⁠ஷெஹான் சேமசிங்க – ரூ. 18.51 மில்லியன்
22.⁠ இந்திக அனுருத்த – ரூ. 19.55 மில்லியன்
23.⁠ மிலன் ஜயதிலக – ரூ. 22.3 மில்லியன்
24.⁠ டாக்டர் ரமேஷ் பத்திரன – ரூ. 28.1 மில்லியன்
25.⁠⁠ துமிந்த திசாநாயக்க – ரூ. 28.8 மில்லியன்
26.⁠⁠ கனக ஹேரத் – ரூ. 29.2 மில்லியன்
27.⁠⁠ டி.பி. ஹேரத் – ரூ. 32.1 மில்லியன்
28.⁠⁠ ⁠ பிரசன்ன ரணவீர – ரூ. 32.7 மில்லியன்
29.⁠⁠ ⁠ டபிள்யூ.டி. வீரசிங்க – ரூ. 37.2 மில்லியன்
30.⁠⁠ சாந்த பண்டார – ரூ. 39.1 மில்லியன்
31.⁠⁠ எஸ்.எம். சந்திரசேன – ரூ. 43.8 மில்லியன்
32.⁠⁠ சனத் நிஷாந்த – ரூ. 42.7 மில்லியன்
33.⁠⁠ ⁠ சிறிபால கம்ப்ளாத் – ரூ. 50.9 மில்லியன்
34.⁠ ⁠அருந்திகா பெர்னாண்டோ – ரூ. 55.2 மில்லியன்
35.⁠ ⁠சுமித் உடுகும்புருவ – ரூ. 55.9 மில்லியன்
36.⁠ ⁠பிரசன்ன ரணதுங்க – ரூ. 56.1 மில்லியன்
37.⁠ ⁠கோகில குணவர்தன – ரூ. 58.7 மில்லியன்
38.⁠ ⁠மோகன் பி டி சில்வா – ரூ. 60.1 மில்லியன்
39.⁠ ⁠நிமல் லான்சா – ரூ. 69.2 மில்லியன்
40.⁠ ⁠அலி சப்ரி ரஹீம் – ரூ. 70.9 மில்லியன்
41.⁠ ⁠காமினி லொகுகே – ரூ. 74.9 மில்லியன்
42.⁠ ⁠ஜான்ஸ்டன் பெர்னாண்டோ – ரூ. 93.4 மில்லியன்
43.⁠ கெஹலிய ரம்புக்வெல்ல – ரூ. 95.9 மில்லியன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More