சிரிய விமானங்கள் வேண்டுமென்றே டமஸ்கஸ் நீர் விநியோகத் திட்டம் மீது தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சிரிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது ஓர் யுத்தக் குற்றச் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் நீர் விநியோகத் திட்டம் தாக்கி அழிக்கப்பட்டதனால் 5.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.. படையினர் நீர் நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னரே நீர் மாசடைந்திருந்தது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டு முதல் டமஸ்கஸின் வடமேற்கு பகுதியின் கட்டுப்பாட்டை கிளர்ச்சியாளர்கள் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.