சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச பிரகடனங்களை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தீர்மானம் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் எடுக்கப்பட உள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானப் பரிந்துரைகளை அமுலாக்கல், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கத்துடன் செயற்பட்டு வருவதாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.