Home இலங்கைதொலைக்காட்சி பார்க்க முற்பட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தொலைக்காட்சி பார்க்க முற்பட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

by admin

 

தொலைக்காட்சி பார்ப்பதற்காக , தொலைகாட்சிக்கு மின் இணைப்பினை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவன்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா்.   யாழ்ப்பாணம் , வேலணை பகுதியை சேர்ந்த சந்திரஹாசன் கனிஸ்டன் (வயது 09) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாா்.

சிறுவனின் தாயார் அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற வேளை வீட்டில் இருந்த சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக தொலைக்காட்சிக்கு மின் இணைப்பை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சிறுவனின் உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More