குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி சுவைய ஐணளáம இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ரிடா இசாக் கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் பலவை பிழையானவை என அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறெனினும், ரிடா இசாக்கை வரவேற்பதாகத் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதியின் நிபுணத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.