குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கிய அரசாங்கம் நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி ஆகியனவற்றை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னரான முரண்பாடுகளை களைவதற்கு நடவடி;ககை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறைமை உருவாக்குவதில் அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்பு வழங்குதல் தொடர்பில் சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.