Home இலங்கைதிருக்கோணேஸ்வரத்தில் இந்தியத் தூதுவரக அதிகாரிகள் கள ஆய்வு

திருக்கோணேஸ்வரத்தில் இந்தியத் தூதுவரக அதிகாரிகள் கள ஆய்வு

by editorenglish

எதிர்காலத்தில் மேள்கொள்ளப்படவிருக்கும் திருக்கோணேஸ்வர ஆலயத் திருப்பணிகள் தொடர்பில்  இந்தியத் தூதுவரக உயர் அதிகாரிகள் கள  ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (08/03/2025) கள ஆய்வு மேற்கொண்டதுடன, ஆலயத்துக்கு  சென்று பல விடயங்களையும்  கேட்டறிந்தனர்.

இதன் போது, அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் ஆறு.திருமுருகன் ஆலய நிர்வாக சபைத் தலைவர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியப்பிரதமரிடம் கோணேஸ்வரத் திருப்பணிக்கு உதவுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில்  குறித்த  திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More