சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மாதம்பே பகுதியில் பேருந்து மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
தலவில தேவஸ்தானத்திற்குச் சென்று விட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த போதே, முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை ஏற்றிச் சென்ற லொறியுடனும், பின்னர் பேருந்து ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, விபத்தினையடுத்து
பேருந்தின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய மீன் லொறி தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்தோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.

