Home இலங்கைபிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

by editorenglish

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09/03/2025) பிற்பகல் ஹட்டன்  புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து ஹட்டன் காவல்நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாா். .

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை, கந்தேகெதர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி, கவர்ச்சிகரமான வட்டிக்குப் பணம் தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து, சுமார் 4.5 மில்லியன் ரூபாவைப் பெற்று, பணத்தைச் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More