ஊடகவியலாளர் கீத் நொயாரை 14 நாட்களுக்குள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றையதினம் இடம்பெற்ற போது நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் கீத் நொயாரை 14 நாட்களுக்குள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவிற்கு கல்கிஸ்ஸ நீதவான் லோசன அபேவிக்ரம உத்தரவு பிறப்பித்துள்ளார். ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை எடுத்தேனும் கீத் நொயார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமென நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை தமது பாதுகாப்பு மற்றும் பயண செலவுகள் குறித்து எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என கீத் நொயார் சர்வதேச காவல்துறையினர் ஊடாக புலனாய்வுப் பிரிவிடம் வினவியுள்ளமைக்கு இந்த விடயங்கள் குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
மேலும் 14 நாட்களுக்குள் கீத் நொயார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அடையாள அணிவகுப்பு நடத்தப்படாது என அறிவித்துள்ள நீதவான் இந்த வழக்கு எதிர்வரும் 30ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென அறிவித்துள்ளார்.