Home இலங்கைகாவல்துறை அதிகாரியின் மகன் மறியலில்

காவல்துறை அதிகாரியின் மகன் மறியலில்

by admin
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த காவல்துறை உயர் அதிகாரியின் மகனை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 யாழ்ப்பாணம் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன் , காவல்நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
 முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வந்த நிலையில், காவல்துறை அதிகாரியின் மகன் தலைமறைவாகி இருந்தார்.
அது குறித்து, யாழ் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு மன்று  காவல்துறையினருக்கு கட்டளையிட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரியின் மகன் இன்றைய தினம் திங்கட்கிழமை சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானதை அடுத்து, அவரை எதிர் வரும் 28ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
அதேவேளை சந்தேக நபரின் தந்தையான  காவல்துறை அதிகாரி முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்கு இடமட மாற்றபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More