இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் இது குறித்து பிசிசிஐ-யிடம் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அடுத்து சில வாரங்களில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், பிசிசிஐ அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் விராட் கோலி அதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 36 வயதாகும்36 வயதாகும் விராட் கோலி தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கடந்த சில நாட்கள் முன்பு தான் 38 வயதான ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாா் 2024 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண முடிவில் ரோகித் மற்றும் கோலி ஆகியோா் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்று இருந்தனர் இந்தநிலையலில் தற்போது விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.
விராட் கோலி கடைசியாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஓட்டங்கள் பெறாமையினால் அதிக விமர்சனங்களையும் சந்தித்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது

