Home இலங்கைஅரசியலமைப்பு சபையின் செயலாளா் பதவி விலகினாா்

அரசியலமைப்பு சபையின் செயலாளா் பதவி விலகினாா்

by admin

 

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க  பதவிவிலகியுள்ளார்.   தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகவும்  , அவரது பதவிவிலகலை அந்த சபை ஏற்றுக்கொண்டதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

நாடாளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க, 25, மே 2023 அன்று அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில்   அதே ஆண்டில் அரசியலமைப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவிக்காக அவருக்கு சுமார் 500,000 ரூபாய் கொடுப்பனவும், ஒரு உத்தியோகபூர்வ வாகனமும் பிற வசதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More