174
புகழ்பூத்த ரொக் என்ட் ரோல் பாடகர் சக் பெரி காலமானார். அமெரிக்காவின் மிசியூரி மாநிலத்தில் சக் பெரி காலமானார் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சக் பெரி 1984ம் ஆண்டில் கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இறக்கும் போது அன்னாருக்கு 90 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
சக் பெரியின் மரணத்திற்கு உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இசைக் கலைஞர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
Spread the love