160
ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன, விமல் வீரவன்சவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உறவினர்கள், நண்பர்களின் பயன்பாட்டுக்காக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் விமல் வீரவன்ச வாகனங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love