Home இலங்கைதிருநெல்வேலியில் உணவகத்திற்கு சீல்!

திருநெல்வேலியில் உணவகத்திற்கு சீல்!

by admin
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் , உணவகங்கள் என்பன பொது சுகாதார பரிசோதகரினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன
அதன் போது, பலசரக்கு கடை ஒன்றில் இருந்து , காலாவதியான பொருட்கள், சுட்டுத்துண்டு இன்றிய பொ (23.06.25)ருட்கள் மீட்கப்பட்டன. அத்துடன் உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமையும் கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து உணவகம் மற்றும் பலசரக்கு கடைக்கு எதிராக நேற்றைய தினம் திங்கட்கிழமை பொது சுகாதார பரிசோதகரினால் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.
அதனை அடுத்து உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த நீதவான் , பலசரக்கு கடை உரிமையாளருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தார்.
உணவாக உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , உணவகத்தில் உள்ள சீர்கேடுகளை சீர் செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு கட்டளையிட்டார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More