உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் நோர்வே முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த தர வரிசையில் நோர்வே முதலாம் இடத்தை பதிவு செய்துள்ளது. இதுவரையில் டென்மார்க்கே உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகித்து வந்தது. இந்த ஆண்டு இந்த தர வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இம்முறை டென்மார்க்கை பின்தள்ளிக் கொண்டு நோர்வே முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. மொத்தமாக 155 நாடுகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பெற்றுக் கொண்டுள்ளன.
உலகின் மிகவும் மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் வரிசையில் தென் சூடான், லைபீரியா, குய்னா, டோகோ, ருவன்டா ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.