விளையாட்டு

ஐ.பி.எல் போட்டித் தொடரிலிருந்து டுமினி விலகிக் கொண்டுள்ளார்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாக உள்ள இந்தியன் பிரமியர் லீக் போட்டித் தொடரில் தென் ஆபிரிக்க வீரர் ஜே.பி டுமினி விலகிக் கொண்டுள்ளார்.  டுமினி, டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும்  தற்போது தாம் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அணி நிர்வாகத்திற்கு டுமினி அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டித் தொடரிலிருந்து டுமினி விலகிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க அணி எதிர்வரும் நாட்களில் போட்டிகளில் பங்கேற்க உள்ளதனால், அந்தப் போட்டிகளில் பங்கேற்கும் நோக்கில் இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்பதனை தவிர்த்துக் கொள்வதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட காரணங்களினால் கடினமான தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிட்டதாகவும் எதிர்வரும் காலங்களில் அணியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் டுமினி தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply