வார இறுதி நாள்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி புகையிரதம், இன்றைய தினம் திங்கட்கிழமை (07.07.25) முதல் கல்கிஸை மற்றும் காங்கேசன்துறை இடையே தினசரி சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த புகையிரதம் கல்கிஸையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.13 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடைந்தது.
காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.58 மணிக்கு கல்கிஸையைச் சென்றடையும்.
அதேநேரம், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்பட்டு வந்த யாழ்தேவி புகையிரதம் இனிவரும் நாட்களில் காலை 6.40 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும்.

