சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில் அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் கலந்துகொண்டுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த பிரேரணையின் பிரதியொன்று ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்ட நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டினை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையென இப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போனோரின் அலுவலகத்தை அமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஐ.நா.வுக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச விசாரணை பொறிமுறையை இலங்கையில் ஏற்படுத்த ஐந. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு மாகாண சபையின் பிரேரணை சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ளது.