Home இலங்கையாழில். திடீரென பெய்த கடும் மழை – 32 பேர் பாதிப்பு

யாழில். திடீரென பெய்த கடும் மழை – 32 பேர் பாதிப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/351 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும், ஜே/363 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 7பேரும், ஜே/364 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More