அரசியல்வாதிகளில் பலர் இன்று மன நோயாளிகளாக திகழ்கின்றார்கள் என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்காக பாலம் ஒன்றை நிர்மாணிக்க போவதாக அரசியல்வாதிகள் சிலர் கூறி, அதற்கு அவர்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையை கூற போனால் இந்தியாவிற்கு பாலம் அமைத்து கொடுப்பதற்கான எந்தவித அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இதயபூர்வமான பாலம் ஒன்றை அமைப்பதே தேவையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு அவர்களது பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வதேச உறவுகளை முன்னெடுத்து செல்வதே தேவையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்திய சந்தை வாய்ப்புக்கள் அவசியம் என்றும் பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.