
நேபாளத்தின் புதிய பிரதம் புஸ்ப கமல் தஹாலுக்கு (Pushpa Kamal Dahal) பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் நேபாளத்தில் அரசியலமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன எட்டப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தொலைபேசி உரையாடல் மூலம் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேபாள புதிய பிரதமர் தஹால் நட்பு நாடான இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மற்றும் நேபாளத்துக்கிடையேயான இரு தரப்பு உறவுகள் தொடர்ந்தும் சிறந்தமுறையில் பேணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment