இலங்கை பாராளுமன்ற பெண்கள் ஒன்றியத்தினால் 22.03.2௦17 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் பாராளுமன்ற உயர் அதிகாரிகள் அரச அதிகாரிகள், பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பெண்கள் பாராளுமன்ற ஒன்றியத்தால் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராசாவுக்கும் பிரதி அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரனுக்கும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது. அந் அறிவுறுத்தலில், தலா 5௦ பயனாளிகளை தெரிவு செய்யுமாறும், நகரதிட்டமிடல் நீர்வளங்கள் அமைச்சினால் மலசல கூடங்களை வழங்குவதற்கு 5௦ பயனாளிகளை தெரிவுசெய்யுமாறும் காஸ் சிலிண்டர் வழங்குவதற்கு 5௦ பயனாளிகளை தெரிவு செய்யுமாறும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு அமைவாக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு நிகழ்விடத்திற்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் வீடுகள் வழங்குவதற்கான சான்றிதழ்களை வழங்குவதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட போதும் அதற்குரிய சான்றிதழ்கள் எதுவும் வழங்கப்படாமையினால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல் மலசலகூடங்களை பெறும் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, நகர திட்டமிடல் நீர்வளங்கள் அமைச்சின் அதிகாரிகளினால் கொண்டு சென்றிருந்தபோதும் உரிய அமைச்சர் கையொப்பம் இட செல்லாததனால் அதுவும் வழங்கப்படவில்லை.
அதேபோல் காஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்காக குடிசை கைத்தொழில் மூலம் உணவு பெறுமதிசேர் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முயற்சியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர் 2.3KG அளவான மிகவும் சிறிய சிலிண்டர் வழங்கப்பட்டமையும் பயனாளிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.