146
ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வியாபார விவகாரங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் சார்லஸ் எச்.ரிவ்கின் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இவர் இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.
அவரின் இந்த பயணத்தின் போது அரச தரப்பு உயரதிகாரிகள் மற்றும் தொழில் துறை தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
Spread the love