Home இலங்கைநீதிமன்ற அவமதிப்பு – குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறை!

நீதிமன்ற அவமதிப்பு – குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறை!

by admin

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம், பிரதிவாதி ஹர்ஷ இலுக்பிட்டிய கடுமையான நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளதாக நீதியரசர் அறிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் போது இலத்திரனியல் விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையினை விதித்திருந்தது.

அத்துடன் பழைய முறையிலேயே விசா வழங்கும் செயன்முறையை செயற்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அந்த உத்தரவை செயற்படுத்த தவறியதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More