அமரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை இருப்பதால் தான் வெற்றி அடைய முடியும் என நேற்று வியாழக்கிழமை வலியுறுத்திய ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இந்த ஒத்திவைப்பு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
ஒபாமா கேயார் என்றழைக்கப்பட்ட சுகாதார மசோதாவினை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையாக உள்ள குடியரசுக் கட்சியின் தலைவரான கெவின் மெக்கார்த்தி இது குறித்து கூறுகையில், அவை வாக்கெடுப்பு நடத்த வெள்ளிக்கிழமை தான் திட்டமிடப்பட்டிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வியாழக்கிழமை மாலை சந்திப்பர் என்று தெரிவித்திருந்தார்.