444
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இதன்படி, ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா’வும் இருந்துள்ளார்.
இந்த தகவலை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிக் காவற்துறை அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.
நேற்று (30.09.25) பிற்பகல் காவற்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பதில் காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
Spread the love

