Home உலகம்பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்: 26 பேர் பலி – பலர் காயம்!

பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்: 26 பேர் பலி – பலர் காயம்!

by admin

மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சுமார் 200 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் செபு நகரின் கடலோரப் பகுதியில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் கட்டடங்களும் சேதமடைந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More