Home இலங்கையுவதியை அடித்தே கொன்ற மாமன் விளக்கமறியலில்

யுவதியை அடித்தே கொன்ற மாமன் விளக்கமறியலில்

by admin

 

வீட்டாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார் என யுவதி மீது பச்சை தென்னை மட்டையால் , தாய் மாமனார் தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி உயிரிழந்துள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , இருபாலை பகுதியை சேர்ந்த , பிரதீப் நிவேதா (வயது 24) எனும் யுவதி கடந்த 09ஆம் திகதி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என வீட்டார் தெரிவித்து சடலத்தை யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்திருந்தனர்.
அந்நிலையில் , சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் ,  யுவதியின் உடலின் பல இடங்களில் கண்டல் காயங்கள் , உள்காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் , யுவதியின் மீதான தாக்குதலே உயிரிழப்புக்கு கரணம் கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து  காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு , பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ,
உயிரிழந்த யுவதி, தாய் மற்றும் தகப்பன் இல்லாத நிலையில் ,  சகோதரி குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி வீட்டில் யாருக்கும் சொல்லாது வெளியே சென்ற யுவதி இரவு வீடு திரும்பியுள்ளார்.
அது தொடர்பில் விசாரணை செய்து , யுவதியின் தாயின் தம்பியான தாய் மாமன் தென்னை மட்டையின் பச்சை மட்டையால் , மூர்க்கத்தனமாக யுவதியை தாக்கியுள்ளார். மட்டை பிய்ந்து தும்புகள் ஆகும் வரை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அழுது கொண்டு படுத்த யுவதி மறுநாள் அதிகாலை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில், தூக்கத்தால் எழுந்து , மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்
அதனை அடுத்து வீட்டார் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து , காவு வண்டி வீட்டிற்கு வருவதற்கு முன்பே யுவதி உயிரிழந்தமையால் , நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் யுவதி உயிரிழந்து விட்டார் என கூறி சென்று இருந்தனர்.
அதன் பின்னர் வேறு வாகனத்தில் யுவதியின் சடலத்தை எடுத்து சென்று , யாழ் . போதனா வைத்தியசாலையில் வீட்டார் ஒப்படைத்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட வேளையே யுவதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் வெளி தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து  காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து , யுவதியின் தாய் மாமனான , யாழ் . போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார தொழிலாளியை கைது செய்து , விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்  யாழ் .  நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , தாய்மாமனை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More