430
நாவலப்பிட்டி பழைய புகையிரத முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாத குழந்தை மற்றும் இரு பெண்கள் என மூவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பிரதேசத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்
Spread the love

