Home இலங்கைஅவசர அறிவித்தல்- மன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அவசர அறிவித்தல்- மன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை.

by admin
மன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் அநேக இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக ஏ-32 வீதி மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறித்த வீதியூடாக  பெரிய மற்றும் சிறிய வாகனங்களில் பயணம் செய்வதை முற்றாக தவிர்க்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More