புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டினார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பெண்ணின் விளக்கமறியலை நீதவான் நீடித்துள்ளார்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள பெண் மன்றில் முன்னிலை ஆக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி மன்றில் எழுத்து மூல விண்ணப்பம் செய்தார்.
அதனையடுத்து பிணை விண்ணப்பத்தினை அடுத்த வழக்கு தவணையின் போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து வழக்கினை 22ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.