நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் உறுப்பினர்கள் உள்வாங்கப்படாமை குறித்து முக்கிய தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் இரு கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதற்குச் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
“அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்பது கட்சிகளின் கூட்டம் அல்ல; அது மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் இடம். எனவே, அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்பது அவசியமானது” எனத் தவிசாளர் மயூரன் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பிரதேசம் சார்ந்த தேவைகளை முன்வைக்கும் போதுதான் உண்மையான அபிவிருத்தி சாத்தியமாகும் எனச் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.
அவ்வாறு அனுமதி வழங்காது ஒரு முழுமையற்ற வெறும் கண்துடைப்பிற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடப்படுமாயின் அதனை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்காமல் முற்றாகப் புறக்கணிக்கின்றோம் என்றார்.
Tag Words: #Nallur #PradeshiyaSabha #LocalGovernment #JaffnaNews #DevelopmentMeeting #Boycott #PeoplePower #TamilNews #SriLankaPolitics #NallurCouncil

