185
இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாடு மீளவும், பாதிக்கப்பட்ட மக்கள் புதிய ஆண்டில் அமைதியான வாழ்வைப் பெறவும் வேண்டி யாழ்ப்பாணம் நாக விகாரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட நிகழ்வு நடைபெற்றது.
சர்வதேச பேரவையின் (International Council) ஏற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில் இந்து, பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது.
மலரவிருக்கும் புதிய ஆண்டு (2026) பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையையும், நிம்மதியையும் கொண்டு வர வேண்டும் எனச் சர்வமதத் தலைவர்கள் ஆசி வழங்கினர்.
யாழ்ப்பாணத்தின் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Spread the love

