வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. தமது கோரிக்கைகள் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்விஅமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் 37ஆவது நாளாகவும், வவுனியாவில் 33ஆவது நாளாகவும், முல்லைத்தீவுவில் 21ஆவது நாளாகவும், வடமராட்சி கிழக்கில் 14ஆவது நாளாகவும், திருகோணமலையில் 24ஆவது நாளாகவும் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.