181
விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 16வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே திரண்ட மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Spread the love