Home இந்தியாவிவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் தொலைபேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் – மாணவர்களை கைது செய்தால் தற்கொலை செய்வோம் – விவசாயிகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் தொலைபேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் – மாணவர்களை கைது செய்தால் தற்கொலை செய்வோம் – விவசாயிகள்

by admin


தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு, ஆதரவாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் தமிழர் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 14 பேர்,  தொலைபேசிக் கோபுரம் மீது  ஏறி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை அடுத்து அவர்கள் கீழே இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் தமது போராட்டத்தை பாரியளவில் மேற்கொள்வோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களை கைது செய்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களை கைது செய்தாலோ அல்லது அவர்கள் மீது காவல்துறையினர் தீக்குளிப்போம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லியில்; 17வது நாட்களாக  ; போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக  சென்னை மெரினா, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More