Home இலங்கைநாற்பதாவது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

நாற்பதாவது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

by admin

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை  நாற்பதாவது   நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.  நாளாந்தம் பல்வேறு  அமைப்பினரும் அரசியல் தரப்பினர்களும் வருகை தந்து செல்கின்றனர்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இரவு பகலாக  தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கிறது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More