இந்தியா

தெற்கு சூடானில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள் விடுவிப்பு


தெற்கு சூடானில் போராட்டக்காரர்களால் மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள், இந்திய அரசின் தலையீட்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, தெற்கு சூடானில் இயங்கிவரும் தமிழக நிறுவனமான ‘தார் பெட்ரோலியம் இயக்க நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குநர் அஜய் ராஜா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தெற்கு சூடானில் மிதுன் மற்றும் எட்வர்ட் என்னும் இரண்டு இந்தியர்களை விடுவிக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி. என்னுடைய நண்பர்கள் திரும்பிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 9-ம் தேதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இரண்டு இந்தியர்கள் தெற்கு சூடானில் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் சுஷ்மா சுவராஜுக்கு ட்வீட் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers