Home உலகம்வர்ஜீனியா கிஃப்ரெ: நீதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் துயரம்!

வர்ஜீனியா கிஃப்ரெ: நீதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் துயரம்!

by admin
ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் உலகையே அதிரவைத்தவர் வர்ஜீனியா கிஃப்ரெ (Virginia Giuffre). அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த அவர், கடந்த 2025 ஏப்ரல் மாதம் தனது 41-வது வயதில் மரணமானார்.
🔍எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் மீண்டும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட நேரத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வர்ஜீனியா உயிரிழந்தார்.
அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இது ஒரு தவறான முடிவு என்று அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அவர் அனுபவித்த மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியே இந்த தற்தணிவ மரணம் என காரணம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இது குறித்த பலத்த சந்தேகங்கள் உள்ளன. அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் சமூக வலைதளங்களில் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
📖 அவரது கடைசிப் பதிவு: “Nobody’s Girl”
அவரது மரணத்திற்குப் பிறகு, ஒக்டோபர் 2025-இல் அவரது நினைவுக்குறிப்புகள் (Memoir) புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் எப்ஸ்டீன், மேக்ஸ்வெல் மற்றும் பல செல்வாக்கு மிக்க நபர்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் பதிவு செய்துள்ளார்.
எப்ஸ்டீனின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? என்ற கெள்விகளை பலர் கேட்கிறார்கள். ஆனால், வர்ஜீனியாவின் மரணம், மற்ற பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வரும் மறைமுக மிரட்டல்கள். பொதுவெளியில் பேசும்போது எதிர்கொள்ளும் அவதூறுகள் என அனைத்திற்கும் அவர்கள் அஞசவேண்டியுள்ளது.
“நீதிக்காகப் போராடுவது எவ்வளவு கடினமானது என்பதற்கு வர்ஜீனியாவின் வாழ்க்கை ஒரு சாட்சி. அவர் ஒரு போராளியாகவே நம் நினைவில் இருப்பார்.”
________________________________________
(Names Referenced in the Epstein Files – The evidence has not been proven.)
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More