236
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விஜயம் செய்யவுள்ள இக்குழுவினர், அங்குள்ள அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களை நேரில் பார்வையிட உள்ளனர்.
அண்டை நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துதல். தெற்காசிய பிராந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடுதல்.
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று (05) காலை உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றே இந்த விஜயம் அமைந்துள்ளது. இக்குழுவில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்திய மாநிலங்களுக்குச் செல்லும் நீங்கள், அங்கிருக்கும் “அதிகாரப் பரவலாக்கல்” (Devolution of Power) முறைமை குறித்தும் ஒருமுறை ஆழமாகப் படித்துப் பார்த்துவிட்டு வரலாம். இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களில் இது ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்குமல்லவா?
இந்தியாவின் மாநில சுயாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி மாதிரிகளை அவதானித்தல். அதிகாரப் பகிர்வு என்றாலே அலர்ஜியாக இருக்கும் ஜே.வி.பி, இந்திய மாநிலங்களின் அதிகார அலகுகளைப் பார்த்துவிட்டு வந்ததும் தனது நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றங்களைக் காட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
#JVP #TilvinSilva #IndiaVisit #Diplomacy #SriLankaPolitics #ICCR #NewDelhi #Kerala #Gujarat #NPP #Development #BilateralRelations #LKA #IND
Spread the love

