229
“தலைவர் பிரபா*கரனின் தூய்மையான வாழ்வியலைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசிய கருத்தை திருமாவளவன் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.” என காக்கா அண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசியத் தலைவர் மேதகு வே*பிரபா*கரனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் உலகத்தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் மூத்த போராளி காக்கா அண்ணா (மனோகரன்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் மற்றும் போராளிகள் மத்தியில் திருமாவளவன் மீது இருந்த மதிப்பினை, அவரின் இந்தப் பொறுப்பற்ற பேச்சு சுக்குநூறாக்கியுள்ளது. 14 பேரின் சடலங்களைக் கடந்தா தலைவர் தனது வாழ்வைக்கட்டமைத்தார்? போராட்ட வரலாற்றையும், தலைவரின் ஒழுக்கத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளது.
மிகக் கடுமையான போர்ச் சூழலிலும், உயர்ந்த விழுமியங்களைப் பேணிய ஒரு தலைவரின் குடும்ப வாழ்க்கையை இழிவுபடுத்துவது ஏற்க முடியாதது.
தலைவரின் தியாகத்தையும், போராட்ட வாழ்வையும் அறிந்த எவரும் இத்தகைய கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் என்பதே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் பொதுவான கருத்தாக உள்ளது.
________________________________________
Spread the love

