Home இலங்கை⛈️ ட்வா புயலால்  103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனா் 

⛈️ ட்வா புயலால்  103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனா் 

by admin

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ட்வா (Twa) புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் பதுளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளாா்.

பெற்றோரை இழந்த சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் விசேட பராமரிப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்
ஆதரவற்ற இந்தச் சிறுவர்களைத் தத்தெடுக்க அல்லது பொறுப்பேற்கப் பல தரப்பினர் முன்வந்துள்ளனர் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

எவ்வாறாயினும், சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நீதிமன்ற உத்தரவு மற்றும் முறையான சட்ட விதிகளுக்கு உட்பட்டே அவர்கள் தத்தெடுக்கப்படுவார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் பதுளை மாவட்டத்தில் அதிகரித்து வரும் ஏனைய பாதிப்புகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இளம் வயதில் தாய்மையடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்குப் போதிய பராமரிப்பு வழங்கத் தேவையான இடவசதிகள் பற்றாக்குறையாக உள்ளது குறித்தும் ஆராயப்பட்டது

அத்துடன்இணையவழிக் குற்றங்களால் (Cyber Crimes) சிறுவர்கள் பாதிக்கப்படுவது பதுளையில் அதிகரித்துள்ளது எனவும் பெற்றோர்களால் பிள்ளைகள் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tag Words: #CycloneTwa #Badulla #ChildProtection #SarojaSavithri #SriLankaNews #SocialWelfare #LKA #BreakingNews2026

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More