130
தலைக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்திருந்த ஒரு நபர், ஒரு பையுடனும் சந்தைக்குள் நுழைந்துள்ளார். அங்குள்ள ஒரு வியாபாரியிடம் பச்சை மிளகாய் கொள்வனவு செய்த அந்த நபர், பின் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டுள்ளார். “இந்தச் சந்தையில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் யார்?” என அவர் வினவியுள்ளார். வியாபாரி தனக்குத் தெரியாது என்று பதிலளித்ததும், அந்த நபர் அங்கிருந்து விரைவாக வெளியேறியுள்ளார்.
அவர் கொண்டு வந்த பையினுள் ரி-56 (T-56) ரக துப்பாக்கி இருந்ததாகவும், இடுப்புப் பகுதியில் கைத்துப்பாக்கி போன்ற ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் நேரில் பார்த்த வியாபாரிகள் சுன்னாகம் காவல்துறையினருக்குத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சந்தையிலுள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு அறிவித்தல்: இந்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளீர்கள்.
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
________________________________________
Spread the love

