190
அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் மீதான அதீத சார்பு ஆகியவற்றைக் குறைக்கும் அபாயத் தவிர்ப்பு (Risk Diversification) இதன் முக்கிய நோக்கம் எனத் தெரிகிறது. அதனால் அமெரிக்கப் பத்திரங்களை விற்பனை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தங்கம் (Gold) மற்றும் பிற பாதுகாப்பான சொத்துகளில் சீனா தனது முதலீடுகளைத் திருப்பி வருகிறது.
உலகிலேயே அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சீனா, தனது முதலீடுகளைத் திரும்பப் பெறுவது அமெரிக்க டொலரின் மதிப்பையும், சர்வதேச வட்டி விகிதங்களையும் பாதிக்கக்கூடும். இது நாடுகளுக்கிடையிலான நிதித் தற்சார்பு (Financial Decoupling) அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களின் (US Treasury holdings) கையிருப்பை படிப்படியாகக் குறைக்குமாறு தனது நாட்டு வங்கிகளுக்கு சீனா அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளது. உலகப் பொருளாதார சந்தையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நிதி ஒழுங்குமுறை ஆணையம், குறிப்பாக பெரிய வணிக வங்கிகளை புதிய அமெரிக்கப் பத்திரங்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்கக் கருவூலப் பத்திர இருப்பு ஏற்கனவே கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது (தற்போது சுமார் $680 பில்லியன்).
________________________________________
Spread the love

