ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் (Antonio Guterres) வல்லரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில் அதனை மீட்பதற்காக இராணுவம் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையுடன் இணைந்து விமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. இந்தத் தாக்குதலின்போது பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்து 55 ஆயிரம் பொதுமக்கள் மொசூல் நகரில் இருந்து இடம்பெயர்ந்துள்ள அதேவேளை 4 லட்சம் பேர் மொசூல் நகரில் சிக்கியுள்ளனர். இந்நிலையிலேயே மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுமாறு வல்லரசுகளிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோசூல் நகருக்கு வெளியே உள்ள முகாம்களை பார்வையிட்ட அன்ரனியோ குட்டாரஸ் மொசூல் மக்களுக்கு உதவி செய்ய தங்களிடம் போதிய நிதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.