214
இந்த விமானம் ஆதன் ஆடே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தைச் சந்தித்துள்ளது.
விமானம் கடற்கரையோர ஆழமற்ற நீர்ப்பகுதியில் விழுந்ததும், அதிலிருந்த பயணிகள் அவசரமாக வெளியே குதித்துத் தப்பித்துள்ளனர். நேரில் பார்த்தவர்கள் எடுத்த வீடியோவில், விமானத்தின் ஒரு சிறகு (Wing) முற்றிலும் உடைந்து தனியாக நீரில் மிதப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கினர். விமானத்தில் பயணித்த 55 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஆதன் ஆடே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்டார்ஸ்கை ஏர்லைன்ஸ் (StarSky Airline) விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாமல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. ஜசீரா கடற்கரை (Jasiira Beach) ஓரமாக விமானம் வழக்கத்திற்கு மாறாகத் தாழ்வாகப் பறந்ததை அங்கிருந்த மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.
தற்போது இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளைச் சோமாலிய விமானப் போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
________________________________________
Spread the love

