Home உலகம்உக்ரைனுக்காக அமெரிக்க ஆயுதங்களை வாங்குகிறது பிரிட்டன்!

உக்ரைனுக்காக அமெரிக்க ஆயுதங்களை வாங்குகிறது பிரிட்டன்!

by admin
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் தற்காப்புத் திறனை வலுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. நேட்டோ அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் சம்மதம் தெரிவித்துள்ளது.
💰 இதற்காக முதற்கட்டமாக 150 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 205 மில்லியன் டாலர்கள்) நிதியை பிரிட்டன் ஒதுக்கியுள்ளது. நேட்டோவின் Prioritised Ukraine Requirements List (PURL) என்ற திட்டத்தின் கீழ் இந்த கொள்முதல் நடைபெறுகிறது. முக்கியமாக உக்ரைனின் வான்பரப்பைப் பாதுகாக்கத் தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence Systems), ஏவுகணைகள் மற்றும் உதிரிப் பாகங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
🛡️ அமெரிக்கா தற்போது நேரடியாக உக்ரைனுக்கு வழங்கும் இலவச இராணுவ உதவிகளைக் குறைத்துள்ள சூழலில், உக்ரைனுக்குத் தேவையான அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களை மற்ற நட்பு நாடுகள் பணம் செலுத்தி வாங்கித் தருவதற்காக இந்த PURL திட்டம் உருவாக்கப்பட்டது. பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) இந்த அறிவிப்பை வெளியிட்டு, உக்ரைனின் பாதுகாப்பில் பிரிட்டன் உறுதியாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
“புடினின் கொடூரமான தாக்குதலுக்கு எதிராக உக்ரைனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு வசதிகளை நாம் அனைவரும் இணைந்து வழங்க வேண்டும்.” என ஜோன் ஹீலி.
🌍 இந்தத் திட்டத்தில் பிரிட்டன் தவிர அவுஸ்ரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. இதன் மூலம் உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More