257
வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un), தனது இளம் வயது மகள் கிம் ஜு ஏ (Kim Ju Ae)-வை நாட்டின் அடுத்த தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு (NIS) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதுவரை “பயிற்சி நிலையில்” இருந்த கிம் ஜு ஏ, தற்போது “அதிகாரப்பூர்வ வாரிசு நியமன நிலைக்கு” (Successor-designate stage) முன்னேறியுள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் 13 வயதே ஆன கிம் ஜு ஏ, சமீபகாலமாக முக்கிய ராணுவ விழாக்கள், ஏவுகணை சோதனைகள் மற்றும் தொழிற்சாலை திறப்பு விழாக்களில் தனது தந்தையுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவர் நாட்டின் சில முக்கியக் கொள்கை முடிவுகளில் தனது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாகவும், இது அவர் ஆட்சி அதிகாரத்திற்குத் தயார் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையானால், வடகொரியாவின் வரலாற்றிலேயே ஒரு பெண் நாட்டின் உயரிய பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
இந்த பெப்ரவரி இறுதியில் நடைபெறவுள்ள வடகொரியாவின் 9-வது கட்சி மாநாட்டில் (Workers’ Party Congress), அவருக்கு மிக முக்கியமான ஒரு பதவி வழங்கப்படலாம் அல்லது அவர் அதிகாரப்பூர்வமாக வாரிசாக அறிவிக்கப்படலாம் என்று அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது வடகொரியாவின் இரண்டாம் நிலைத் தலைவராக அவர் பார்க்கப்படுவது உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
________________________________________
Spread the love

